2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வீதியிலிருந்து சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை சங்கரநாராயனார் ஆலய முன்றலில் இருந்து 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் கிளிநொச்சியில் வயல் செய்வதற்காக வந்து செல்பவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. சாமி என்று அழைக்கப்படும் அவருடைய முழுமையான பெயர் விபரங்கள் தெரியவில்லை.

சடலத்தில்; காயங்கள் இருப்பதால் வீதியால் சென்ற வாகனம் இவரை மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் கூறினர். சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .