2025 ஜூலை 10, வியாழக்கிழமை

"31 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை"

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகளில் 31 வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கு வைத்தியர்கள் எவரும் இல்லாதிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினாவிடம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (02) விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடும்போது, மாகாண சுகாதார அமைச்சர் இந்த விடயத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் குறித்த வைத்தியசாலைகளை மூடாமல், ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்களைக் கொண்டு நடத்தி வருவதாக மாகாண அமைச்சர் எடுத்துக்கூறினார்.

வைத்தியர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்து தருவதாக மத்திய சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .