2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாகதம்பிரான் பொங்கலை முன்னிட்டு பொலிஸார் கடமையில்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு  ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்மன் மகேந்திரா தெரிவித்தார்.

ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் உற்சவத்துக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பக்தர்களின் நலன் கருதி பாதுகாப்பு கடமைகளுக்காக சீருடை மற்றும் சிவில் உடைகளில் ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆலய சுற்றாடலில் பொலிஸ் பணிமனையொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத்துக்கு செல்லும் வீதிகளில் போக்குவரத்து கடமைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்  எனவும்  அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .