2025 ஜூலை 10, வியாழக்கிழமை

குழு மோதலில் அறுவர் காயம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, வற்றாப்பளை பிரதேசத்தில் இரு விளையாட்டுக் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஆறு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் இறுதிநாள் சுற்றுப்போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிலையில் போட்டிகளும் இடம்பெற்றன.

இந்த சந்தர்ப்பத்திலேயே இரு விளையாட்டுக் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இந்த குழு மோதலில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த விளையாட்டுக்கழக வீரர்கள் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மோதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் முள்ளியவளையைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் முள்ளியவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .