2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அக்கராயன் சந்தியில் தரித்துச் செல்வதற்கான அனுமதி கோரி கடிதம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காயிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் கிளிநொச்சி அக்கராயன் சந்தியில் தரித்துச் செல்வதற்கான அனுமதியைக் கோரி கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.

துணுக்காயிலிருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து சேவை நடைபெற்றது. இந்தப் பேருந்து, அக்கராயன் சந்தியில் 05 நிமிடங்கள் தரித்துச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக பேருந்து சேவை பின்னர் இடம்பெறவில்லை.

ஆலங்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக் கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் ஆகிய கிராமங்களின் மக்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டனர். இதனைக் கருத்திற்கொண்டு அக்கராயன் சந்தியில் தரித்து நின்று பயணிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பில் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .