2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாய்களுக்கு தடுப்பூசி இடுதல்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்;பட்ட பிரதேசங்களிலுள்ள  நாய்களுக்கு  தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை என்பன இணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.

பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.சி.எம்.ஜெஸ்லியின் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்த நடவடிக்கைஇ இன்று செவ்வாய்க்கிழமை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்;பட்ட கணுக்கேணி கற்பக பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள பொதுமண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதுஇ குறித்த பிரதேச மக்கள் தமது வீடுகளில் வளர்க்கும் நாய்களை அழைத்துவந்து குறித்த விசர் நாய் தடுப்பூசியை ஏற்றியதுடன்இ ஊசி ஏற்றியமைக்கான அட்டைகளும் பொதுச் சுகாதார பரிசோதகரினால் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .