2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஆசிரியரின் மரணத்துக்கு நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஆசிரியர் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி, மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியரான திருமதி. ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது 51) கடந்த 30ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த போது, வீதியில் பலத்த பாயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த ஆசிரியர் உயிரிழந்தார்.

அரிப்பு - நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து குறித்த ஆசிரியர் கடந்த 30ஆம் திகதி நானாட்டான் ம.வி பாடசாலைக்கு செல்லதற்காக குறித்த வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில், நீண்ட நேரத்தின் பின் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் யாழ். வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வந்த போதும் இது வரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.

குறித்த பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஓடித்திரியும் டிப்பர் வாகனம் மோதி ஆசிரியர் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு சம்பவங்களினால் ஆசிரியருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற விடயம் இது வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பில் உரிய விசாரனைகளை மேற்கொள்ளுமாறு கோரியும் பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதியில் ஓடுகின்ற டிப்பர் வாகனத்தின் அதிகரிப்பையும் வேகத்தை குறைக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலைகளில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நானாட்டான் பிரதேசச் செயலகத்தை சென்றடைந்தது. பின் மன்னார் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய மகஜர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாசிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .