Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்டகப்பட்டதுடன், அவற்றைக் கடத்திய ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார், புதன்கிழமை (08) தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காடுகளிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மரக்குற்றிக் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மரக்கடத்தல்களினால் எதிர்காலத்தில் சூழல் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பெருமளவான மரக்குற்றிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
23 minute ago