2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பூமலர்ந்தான் வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதிய அரசாங்கத்தின் 100 நாள் துரித வேலைத்திட்டத்தில்; நாடு பூராகவும் 50,000 வீடமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார், மடு பிரதேச செயலாளர் பிரிவில் பூமலர்ந்தான் மீள்குடியேற்ற வீடமைப்புத்திட்டம் நேற்று  செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  மடு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி, மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ பணிப்பாளர் எம்.றியாஸ், திவிநெகும திணைக்களப் பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட இணைப்பாளர், முகாமையாளர்,
நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பூமலர்ந்தான் கிராமத்தில் 253 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. குறித்த கிராமத்துக்கு முதற்கட்டமாக இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயனாளிகள் தம்பனைக்குளம் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள். வருடம் தோறும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பூமலந்தான் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதே வேளை குறித்த கிராம மக்களின்  வீடமைப்புக்காக  குறைந்த வட்டியில் ஒரு இலட்சம் ரூபாய் கடனுதவி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .