2025 ஜூலை 12, சனிக்கிழமை

ராஜபக்ஷவின் நிழல் தற்போதும் தொடர்கின்றது: சந்திரசேகரன்

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ராஜபக்ஷவின் நிழல் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சந்திரசேகரன் புதன்கிழமை (08)  தெரிவித்தார்.

வவுனியா தேக்கவத்தையில் மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை கட்சியின் பிரதம செயலளார் ரில்வின் சில்வா திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கருத்து சுதந்திரத்தை பறித்து தனிநபர் சுதந்திரத்தை பறித்து கொண்ட செயற்பாடுகளே கடந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் ஜனவரி 8ஆம் திகதி ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை அழிப்போம் என தெரிவித்திருந்தோம். அதைப்போலவே ராஜபக்சவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது என்று கூறினார்.

ஆனாலும் இன்றும் ராஜபக்சவின் நிழல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அவருடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தற்போதும் முன்னெடுக்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது என்று தெரிவித்த அவர், இலஞ்ச ஊழிலுக்கு எதிரான செயற்பாடுகளும் ஜனநாயக ஆட்சியும் இன்று உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்றும் உள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .