2025 ஜூலை 12, சனிக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி புகையிரத கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கடந்த 20 மாதங்களாக கடமையாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி புகையிரதக் கடவை காப்பாளர்கள், வியாழக்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20 மாதங்களாக மதவாச்சியிலிருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவிலிருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத பாதையில் கடவை காப்பாளர்களாக பணிபுரியும் இவர்கள்;, நிரந்தரமற்ற வேலையில் தாம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தமக்கு 7,500 ரூபாவே சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா புகையிர நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு கூடிய புகையிரத கடவை காப்பாளர்கள், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமெனவும் 7,500 சம்பளம் பெற நாங்கள் என்ன அடிமைகளா? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக இகில இலங்கை பொது ஊழியர் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .