2025 ஜூலை 12, சனிக்கிழமை

'சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை,  அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக புதன்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே வட மாகாண முதலமைச்சர் எழுத்து மூலமாக இந்த  உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

முதலமைச்சர். வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினரொருவர் மூலமாக சிதம்பரபுரம் மக்களின் தலைவர் பஞ்சலிங்கத்திடம் ஒப்படைத்துள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்விடயம் தொடர்பாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்,  நீங்கள் தற்போது வசிக்கும் காணிகள் உங்களுக்கே பிரித்து வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடனும் கலந்துரையாடப்பட்டது. இணைத்தலைவராக இருந்த ரிஷாத்  பதியுதீனுடனும் கலந்துரையாடப்பட்டது.

விரைவில் உங்கள் காணிகள் உங்களுக்கு பிரித்து கொடுக்க ஆவண செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .