2025 ஜூலை 12, சனிக்கிழமை

உண்மையான அரசியல் பணி செய்ய இளைஞர்கள் தயாராக வேண்டும்: வினோ எம்.பி

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்களை அணி திரட்டவும்,தலைமை தாங்கவும் கூடிய சக்தியும் பலமும் இன்றைய இளைஞர் சமுதாயத்திடம் அதிகம் உள்ளது. சுயநல அரசியல் வாதிகளின் கைகளினால் கறை படிந்து கொண்டிருக்கும் தூய்மையான அரசியலை உங்களைப்போன்ற இளைஞர்களினால்தான் காப்பற்ற முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச இளைஞர் சம்மேலன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

சில சுயநல அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளினாலும்,போக்குகளினாலும் நீங்கள் அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம்.கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்கும் போது அரசாங்கம் சந்தேகம் கொண்ட ஒரு நிலைமை இருந்தது.

ஒரு காலத்தில் துப்பாக்கி கலாசாரம் மேலோங்கி இருந்தது. சாதாரண இளைஞர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் நீங்கள் அரசியலில் ஈடுபட அச்சப்பட்டீர்கள்.

இன்று அந்த நிலமை மாறியிறுக்கின்றது.நீங்கள் தேர்தலிலும்,அரசியலிலும் ஈடுபட நாம் வாய்ப்புக்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.

நேர்மையான,உண்மையான அரசியல் பணி செய்ய நீங்கள் தயாராக வேண்டும்.ஒரு சில அரசியல் வாதிகள் செய்கின்ற தவறுகளினால் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.

சமுக,சமூதாய பணிகளில் நீங்கள் வெற்றி கொண்டால் அரசியல் பணிகளிலும் உங்களினால் வெற்றி கொள்ள முடியும். எமது மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை உங்களினால் கொண்டு வர முடியும்.

அண்மைய அரசியல் மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு இதற்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துள்ளது.

அரசியலோடு சமூக,பொருளாதார கல்வி போன்ற விடையங்களிலும் இளைய சமுதாயம் புரட்சிகர சிந்தனைகளுடன் போராட முன்வர வேண்டும்.என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .