2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் திறந்துவைப்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழுவின்  Northern Muslim Citizens Committee (NMCC)  பிரதான காரியாலயம் ஏ.எச்.எம்.முபாரக் மௌலவி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை(10) ,மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு  ஆண்டகை வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக் காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார். 

இதன் போது குறித்த நிலையத்தின் பணிப்பாளர்  நிஹ்மத்துல்லா,தலைவர் ஏ.எச் எம்.முபாரக் மௌலவி, செயலாளர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லா மௌலவி, ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .