Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பரந்தன் பகுதியிலுள்ள தனது 7 ஏக்கர் சொந்த காணியை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கூறி புதன்கிழமை (15) உண்ணாவிரதமிருந்த இந்திரா யோகேந்திரன் பொலிஸார், மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோரின் உறுதிமொழியை அடுத்து கைவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
1972ஆம் ஆண்டு தனது தந்தையார் தனக்கு சீதனமாக வழங்கிய காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார் எனக்கூறி பெண்மணி உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம் இருந்த பெண்ணை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் சந்தித்தார்.
புதன்கிழமை (15) காலை தொடக்கம் மாலை வரையில் உண்ணாவிரதமிருந்த பெண்ணை அவதானித்த பொலிஸார், பெண்ணுடன் சென்று உரையாடினர். இராணுவத்தின் அதிகாரியொருவரும் பெண்ணுடன் சென்று உரையாடினர். பெண்ணின் வயதைக் கருத்திற்கொண்டு அவரை போராட்டத்தை கைவிடும்படி கோரினர்.
உறுதிமொழி தந்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவதாகக் கூறியதையடுத்த, பெண்ணை மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், மேலதிக மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (20) முன்னர் நியாயமான பதிலை வழங்குவதாக பெண்ணுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, தனது போராட்டத்தை அவர் கைவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago