Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 37,312 கால்நடைகள் உள்ளபோதும், அவற்றுக்கான மேய்ச்சல்தரவைகள் பற்றாக்குறையாக காணப்படுகின்றது என்று மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அதிகாரி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாகக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது. கால்நடை பண்ணையாளர்களில் பலர் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரவைகள் இல்லாது இருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலக பிரிவிலும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பு சட்டவிரோதமான முறையில் சுவீகரிக்கப்பட்டு, பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படுவதுடன், குடியிருப்புப் காணிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்களிலுள்ள கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை பளை பிரதேச செயலக மேய்ச்சல் தரவைகளுக்கு கொண்டுசென்று பராமரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகள் இருந்தன. அவற்றில் பல கால்நடைகள் அழிந்தமையால் எஞ்சியுள்ள கால்நடைகள் தற்போது மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருக்கின்றன.
கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 10,834 கால்நடைகளும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 15,054 கால்நடைகளும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் 9,073 கால்நடைகளும் பளை பிரதேச செயலக பிரிவில் 2,351 கால்நடைகளும் என மொத்தம் 37,312 கால்நடைகள் உள்ளன.
கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைக்க வேண்டியது அவசியமானதாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago