Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றோசேரியன் லெம்பேட்
கடந்த இரு தசாப்த கால யுத்தம் நிறைவடைந்து வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழுவின் தலைவரும் வடமாகாண முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் இணைப்பாளருமான மௌலவி ஏ.எச்.எம்.முபாரக் ரஷாதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வடக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தமது வணக்க வெளிப்பாடுகளை மேற்கொள்ளும் சமயஸ்தலமாக பள்ளிவாசல்களையே பேணிப்பாதுகாத்து வந்தார்கள்.
எனினும் 1990இல் வடக்கு முஸ்லீம்கள் அணிந்த உடையின் காரணமாக பலவந்தமாக வெளியேற்றப்பட்டதனால் அனைத்து பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுவதால் அவற்றை மீள நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது.
அவ்வாறே முன்னர் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் தற்போது புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசல்களையும் உடனடியாக முஸ்லிம் கலாசார அமைச்சில் பதிவு செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.
மேற்படி பதிவுக்கான விண்ணப்பங்களை அல்லது மேலதிக விபரங்களை மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள வடக்கு முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு தலைமைச்செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களைப் பெற 0772282165 ஃ 0773257722 இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
3 hours ago
4 hours ago