Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
அபிவிருத்திகள் கிராம மட்டங்களில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மக்களை தொட்டே ஆரம்பிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் பேசாலையில் உள்ள 3 மாதர், கிராம அபிவிருத்திச்சங்கங்களினூடாக உதவித்திட்டம் வழங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை (17) பேசாலை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் குடும்ப அங்கத்தவர்கள் சுமார் 150 பேருக்கு சேலை மற்றும் சாரம் என்பன வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இவ்வாறான வேலைத்திட்டங்களை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பேசாலை முருகன் கோவில் பகுதிக்கு 2 மில்லியன் செலவில் அரைக்கும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எனது மக்களுக்கு என்னாலான சகல உதவித்திட்டங்களையும் வழங்குவேன். அபிவிருத்திகள் கிராம மட்டங்களில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மக்களை தொட்டே ஆரம்பிக்க வேண்டும்.
காரணம் உண்மையில் தேவை உள்ளவர்களை இனங்கண்டு சரியான முறையில் இவ்வாறான விடயங்களை நகர்த்த கிராம மட்ட அமைப்புகள் பக்க சார்பின்றி இயங்க வேண்டும்.
இந்த உதவித்திட்டத்தில் விடுபட்டுள்ள 100 வீட்டுத்திட்டம் மற்றும் 50 வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளிலும் உள்ளவர்கள் மேற்படி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் இப்பொருட்கள் வழங்குவேன் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசாலை மீனவர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு பேசாலை மீனவர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் அங்குள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் தொடர்பிலும் மற்றும் மானியங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு இந்திய இழுவைப் படகுகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago