2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாடுகளின் நடமாட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ-32 பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகாரித்துள்ளமையால்,  போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதோடு, விபத்துக்கள் ஏற்படும் நிலையும் தோன்றியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து சேவைகள்,  குறித்த வீதியூடாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீதியில் நாளாந்தம் காலை மற்றும் மாலை நேரங்களில், பல நூற்றுக்கணக்கான மாடுகள் வீதியை இடைமறித்துக்கொண்டு செல்லுகின்றன.

இதனால் போக்குவரத்துக்கள் நீண்ட நேரம் தடைப்படுவதோடு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் குறித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச சபை உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .