2025 ஜூலை 12, சனிக்கிழமை

முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

Sudharshini   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகளில் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எட்மன் மகேந்திரா ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்த வருடத்தின் கடந்த 3 மாதங்களில் 872 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் 854 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு கடைத்த 3457 முறைப்பாடுகளில் 3332 முறைப்பாடுகளுக்கும் 2013ஆம் ஆண்டு கிடைத்த 3976 முறைப்பாடுகளில் 3918 முறைப்பாடுகளுக்கும் 2014ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற 3017 முறைப்பாடுகளில்   2954 முறைப்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .