2025 ஜூலை 12, சனிக்கிழமை

நீராவிப்பிட்டி கிராமத்துக்கு ஹூனைஸ் பாருக் விஜயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஹூனைஸ் பாருக் சனிக்கிழமை (18)  முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி கிராமத்துக்கு விஜயம் செய்தார்.

நீராவிப்பிட்டி கிராமத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், அக்கிராமத்திலுள்ள கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கிராம மட்ட அமைப்புகளுக்கு விளக்கங்களை வழங்கிய நாடாளுமன்ற  உறுப்பினர், கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்து கொடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

இந்த விஜயத்தின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முகமம்து ரிசாம், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .