Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 பொலிஸ் நிலையங்களுக்கும் 200 தமிழ் பெண் பொலிஸார் தேவையாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்மன் மகேந்திரா, ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி, நாச்சிக்குடா, முழங்காவில் மற்றும் கிளிநொச்சி ஆகிய 5 பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ளதுடன், அவற்றின் கீழ் பொலிஸ் காவலரண்கள் பலவும் காணப்படுகின்றன.
இந்த நிலையில், பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் பற்றாக்குறையாகவுள்ளனர்.
இதனால் பெண்களால் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுப்பதில் காலதாமதங்கள் ஏற்படுகின்றன.
இதனை நிவர்த்தி செய்ய 200 பெண் தமிழ் பொலிஸார் தேவை என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago