2025 ஜூலை 12, சனிக்கிழமை

43 முதிரை மரக்குற்றிகளுடன் 4பேர் கைது

Thipaan   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளை இரண்டு டிப்பர் வாகனங்களில் சட்ட விரோதமாக கொண்டு சென்ற நால்வரை ஞாயிற்றுக்கிழமை (19) காலை கைது செய்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு டிப்பர் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலக்கவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இம் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு டிப்பர் வாகனங்களில் மடுவில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டுசெல்லப்படவிருந்த 43  முதிரை மரக்குற்றிகளை பள்ளமடு பகுதியில் வைத்து பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்;.

இரண்டு டிப்பர் வாகனங்களிலும் முதிரை மரக்குற்றிகள் வைக்கப்பட்டு அதற்கு மேல் கல், மண் என்பன இடப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோதே பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரையும் அதன் உரிமையாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகளும் இரண்டு டிப்பர் வாகனங்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .