2025 ஜூலை 12, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கொழும்பிலிருந்து  பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ், செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து ஏற்றிய நிலையில் வீதியில் தரித்து நின்றிருந்த பாரவூர்தி மீது  பஸ் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியும்; நடத்துநரும் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சாரதி நித்திரை தூக்கத்தில் இருந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பஸ் விபத்துக்குள்ளாகியமையடுத்து, பயணிகள் பிறிதொரு பஸ் மூலம் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .