2025 ஜூலை 12, சனிக்கிழமை

பெண்கள் மற்றும் சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுவரகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், திணைக்களங்கள் மூலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மேலும், குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோக நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நலத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் பதவியேற்ற பின்னர் கலந்துகொண்ட முதலாவது கூட்;டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .