2025 ஜூலை 12, சனிக்கிழமை

பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலையை விட்டு இடைவிலகி பாடசாலைக்கு  செல்லாமல் 186 சிறுவர்கள் இருப்பதாக மாவட்டச் செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளது.

இச்சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக, இவர்களிடமுள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு தொடர்ந்தும் கற்க விரும்பும் சிறுவர்களுக்கு உதவிகள் செய்யப்படவுள்ளன.

மேலும் கல்வி கற்க விருப்பம் தெரிவிக்காத பிள்ளைகள், தொழில் செய்ய விரும்பினால் அவர்களின் வயதைக் கருத்திற்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அடிப்படை கல்விச் சான்றிதழ் பெறுவதற்கு அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைக்குச் செல்வதற்கு தாயாராகவுள்ள பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி அவர்களின் எதிர்காலமும் வளமாக்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பெண்கள், சிறுவர் பிரிவால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .