2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொக்கிளாய் காணி அளவீடு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (21) மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கை, காணி உரிமையாளர்கள், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும், தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களும் சென்றிருந்தனர்.

நில அளவையாளர்களுடன் அவ்விடத்துக்கு வந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சிலர் அது தங்களுடைய காணிகள் என வாதிட்டனர். 

காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கின்றது, காணிகளை நிலஅளவை செய்யவிடமாட்டோம் உங்கள் முயற்சியைக் கைவிடும் வரை இவ்விடத்தை விட்டு நகரமாட்டோம் என காணி உரிமையாளர்கள் கூறினர்.

இதனையடுத்து, நிலஅளவை பணிகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .