2025 ஜூலை 12, சனிக்கிழமை

அரசாங்க அதிபர் - வடமாகாண அமைச்சர் சந்திப்பு

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில் புனரமைப்புக்களை மேற்கொள்ளுவது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை(21) மாலை மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது, மன்னார் மாவட்டத்தில் கிரவல் மண், அளவிற்கு அதிகமாக அகழப்படுவதினால் கிரவல் மண் அகழ்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் வீதிகளை அபிவிருத்தி செய்ய எமது வளத்தை பயன்படுத்துவதன் வீதிகளை புனரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், தற்போது வீதி அபிவிருத்தி பணிகளுக்கு கிரவல் அகழ்வதற்கான விசேட அனுமதியும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த விசேட சந்திப்பின் போது வவுனியா மன்னார் வீதி அபிவிருத்தி திணைக்கள  பிரதம பொறியியலாளர் எஸ் ரகுநாதன்; கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .