2025 ஜூலை 12, சனிக்கிழமை

பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் வழித்தட அனுமதி இரத்து செய்யப்படும்: டெனீஸ்வரன்

Menaka Mookandi   / 2015 மே 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பயணிகள் நலன்களை பாதிக்கும் வகையிலும் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் போக்குவரத்துக்களில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்;களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களின் வழித்தட அனுமதி இரத்துச் செய்யப்படும்; என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் பஸ் உரிமையார்;களுடனான சந்திப்பொன்று அமைச்சரின் தலைமையில் வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'இலங்கை போக்குவரத்துச் சபையினருக்;கும் தனியார் பஸ் சேவையினருக்கும் நேர ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இவற்றை கவனத்தில் கொண்டு மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இணைந்த நேரஅட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதம கணக்காளரை தலைமையாகக் கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்;ளடக்கிய வகையில் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு மிகவிரைவாக நேர அட்டவணையின் அடிப்படையில் தனியாருக்கு 60 வீதமான சேவையையும் இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு 40 வீதமான சேவையையும் ஒதுக்கி அதனை நடைமுறைப்படுத்தி கண்காணிக்கவுள்ளதாக' கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .