2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வன்புணர்வுச் சம்பங்களை கட்டுப்படுத்த விழிப்புக்குழு, கல்விக்குழு நியமனம்

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன், சிவபுரத்தில் 7 வயது சிறுமியொருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தை அடுத்து, அப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை உள்ளடக்கிய வகையில் 15பேர் கொண்ட விழிப்புக்குழு ஒன்றும் ஏழுபேர் கொண்ட கல்விக் குழு ஒன்றும்; நியமிக்கப்பட்டுள்ளன.

மேற்படி வன்புணர்வுச் சம்பவத்தை அடுத்து சிவபுரம் கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (28), நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் மக்கள் சந்திப்புக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போதே, இவ்விரு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

இந்த மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய சிறிதரன் எம்.பி, 'எமது இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கை ஒன்று மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்' என்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழர்களின் கலாசாரத்தில் பெண்கள் உணர்வின் சின்னமாகவே பார்க்கப்பட்டனர். இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது இனத்தை சிதைப்பதற்கான முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

'இதில் நாங்கள் எல்லோருமே விழப்படைய வேண்டும். எமது பிள்ளைகளை காப்பாற்றுகின்ற கடமையும் பொறுப்பும் எங்கள் எல்லோரிடமும் உள்ளது. நாங்கள் சட்டங்களை கையில் எடுக்க முடியாது. நாங்கள்; விழிப்பாக இருக்க வேண்டும். சமூகத்தை சீரழிக்கும் வகையில் கஞ்சா, போதைப்பொருள், கசிப்பு பாவனைகள் அதிகளவில் காணப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களும் எமது சமூகத்தை சீரழிக்கின்றன. புங்குடுதீவில் வித்தியா, கனகராயன்குளத்தில் ஒரு சிறுமி, பரந்தன் சிவபுரத்தில் ஓர் சிறுமி, நாரந்தனையில் ஒரு சிறுமி என இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .