Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 29 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை உடனடியாக வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரியே இந்த பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.
இதில் குறித்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். குறித்த பாடசாலையில் முன்னர் கடமையாற்றிய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றமையை அடுத்து ஆசிரியர் ஒருவர் தற்காலிக அடிப்படையில் அந்த பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு தற்காலிக அடிப்படையில் கடந்த இரு மாதங்களாக அதிபர் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்;த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் நியமிக்கப்பட்ட அதிபர் இந்தப்பாடசாலையில் கடமையாற்றக் கூடாது எனவும் அவரை உடனடியாக இடமாற்றுமாறும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகளுக்கு மகஜர் மூலம் தெரிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தமது கோரிக்கைகளுக்கு எதுவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்பதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை நுழைவாயலை அடைத்து மாணவர்களை வீதியில் மறைத்து வைத்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் மூன்று மணிநேரம் மாணவர்கள் வீதியிலேயே இருந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு கோட்டக்கல்வி அதிகாரி ஈ.எஸ்.பரமேஸ்வரன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது தமது பக்க நியாயங்களை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கோட்டக்கல்வி அதிகாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்த தான் அவதானம் செலுத்துவதுடன், இந்த பிரச்சினை தொடர்பில் வரும் வெள்ளிக்கிழமை 5ஆம் திகதிவரை அவகாசம் வழங்குமாறும் உத்தரவாதம் அளித்ததையடுத்து குறித்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளதுடன், கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago