2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் முக்கியதுவம் வாய்ந்த விக்கிரங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை:சுவாமிநாதன்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இன்று (30) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதோடு ஆலயத்தின் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர், குறித்த ஆலயத்திலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த விக்கிரகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கேதீஸ்வரம் ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபை ஏற்பாடு செய்ததிருந்த ஆன்மீகப் பெருவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர்; கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .