2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாணவியை காணவில்லை

Menaka Mookandi   / 2015 மே 31 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
 
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .