2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஒலுமடுவில் சிறுபோக செய்கையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது

Thipaan   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு ஒலுமடு பிரதேசத்தில் மே மாதம் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் பெய்த மழை காரணமாக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சிறுபோக செய்கையை விட மேலும் 83.5 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள குளங்களின் கீழ் 155 ஏக்கர் சிறுபோக செய்கைக்கு தீPர்மானிக்கப்பட்டு, அதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையின் மே மாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் பெய்த மழை காரணமாக சிறிய, நடுத்தர குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்தன.

இதனையடுத்து, திருமுறிகண்டி குளத்தின் கீழ் 10 ஏக்கரும் தச்சடம்பன் குளத்தின் கீழ் 23 ஏக்கரும் ஒலுமடுகுளத்தின் கீழ் 29 ஏக்கரும் கற்கிடங்கு குளத்தின் கீழ் 15 ஏக்கரும் ஐயன்குளத்தின் 6.5 ஏக்கரும் சிறுபோகச் செய்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒலுமடுவில் மொத்தமாக 238.5 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது சிறுபோக செய்கை செய்கை பண்ணப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .