Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 02 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மோதியதில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்தில், சுமார் 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பஸ் குடைசாய்ந்தமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago