2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு ஊர்வலம்

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரின் லெம்பேட்

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டதோடு புகைத்தல் மற்றும் மது பாவனையை கண்டித்து விழிர்ப்புனர்வு ஊர்வலம், இன்று வியாழக்கிழமை (04) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

மன்னார் பிரதான பாலத்துக்கு முன்னால் குறித்த ஊர்வலம் ஆரம்பமானது. இதன்போது புகைத்தல் மற்றும் மது பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் முச்சக்கர வண்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு முச்சக்கர வண்டிகள் பவனியாக சென்றன.

இதன் பின்னால் பல நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் மற்றும் மது பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்.

குறித்த ஊர்வலம், மன்னார் நகர மண்டபத்தில் முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு விழிர்ப்புணர்வு நிகழ்வுகள் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரியந்த பீரிஸ், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சர்வமதத்தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .