2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முள்ளியவளை பொலிஸ் நிலையம், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று வரத்தகர் சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை (04) புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியிலிருந்து ஆரம்பித்து மாஞ்சோலை வைத்தியசாலை வரை சென்ற இந்த ஊர்வலம், இறுதியாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி, கலைமகள் வித்தியாலயம் தண்ணீரூற்று இ.த.க. பாடசாலை மற்றும் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியலயத்தின் மாணவர்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

அத்துடன் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் உதயராணி முனீஸ்வரன், முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.அபயசேகர, முள்ளியவளை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வர்த்தகர் சங்க பிரிதிநிதிகள் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை உத்தியோகஸ்தர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .