Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 03 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 17,344 வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டிய தேவையிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், '475 வீடுகள் திருத்த வேண்டிய நிலையில் காணப்படுவதுடன் 6,756 குடும்பங்களுக்கு நிரந்தர கழிப்பறைகளும் 475 கழிப்பறைகள் திருத்திக்கொடுக்க வேண்டிய நிலையிலும் உள்ளன' என்றார்.
இதனைவிட 226 புதிய பொதுக்கிணறுகள் அமைக்க வேண்டியும் 32 பொதுக்கிணறுகள் திருத்த வேண்டியும் உள்ளதாக கூறினார்.
8475 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்க வேண்டியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago