2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வன்னி மாவட்ட நிலைமை குறித்து ஆளுநர் - தளபதி கலந்துரையாடல்

George   / 2016 மே 24 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஸ் மதுசங்க

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பேரேரா ஆகியோருக்கிடையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

வன்னி மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
மீள்குடியேறிய மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இராணுவத்தினர் முன்னெடுத்த நிவாரண உதவிகள் தொடர்பில், இதன்போது ஆளுநருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர, வவுனியாவில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல், ஏனைய வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றில் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்தும் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பொதுமக்கள் சாதாரண வாழ்கையை முன்னெடுப்பதற்கு வன்னி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பில் வடமாண ஆளுநர், இதன்போது பாராட்டு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .