Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தின் சில கிராமங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மின்கட்டணப் பட்டியல் கிடைப்பதாகவும் இதனால், தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களில், மின் வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருகை தருவதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனால், தமக்கு பெருந்தொகை பணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்னதர்.
குறிப்பாக கடந்த காலங்களில், ஒவ்வொரு மாதமும் தமக்கு மின்சாரப் பட்டியல் கிடைப்பதாகவும் தற்போது, 3 மாதத்துக்கு ஒரு தடவை வந்து, மின் பட்டியல் வழங்கப்படுவதாகவும், இதனால் அதி கூடிய கட்டண பட்டியல் தமக்கு கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறித்த கிராமங்களில், கடந்த 16-05-2017 அன்று, மின் கட்டண பட்டியல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 14-8-2017 அன்று ஒரு மின் கட்டண பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிடையில், 27-07-2017 அன்று ஒரு மின் கட்டண பட்டியல் தொடர்பில், மின் மானி வாசிப்பு மேற்கொண்டது போல், கடைசியாக 3 மாதங்களின் பின் வழங்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்குச் சென்று மின் மானி பார்க்காது, மின் கட்டண பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதி கூடிய தொகை தமக்கு மின் கட்டணமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, ஒவ்வொரு மாதமும், தமக்கான மின் கட்டண பட்டியல் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக வீடுகளுக்குச் சென்று மின் வாசிப்பை மேற்கொள்ளாது, அலுவலகத்தில் இருந்து கொண்டு, சராசரி கணிப்பீட்டின் ஊடாக பட்டியல் போடுவதினூடாகவே, குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் செயற்பாட்டை நிறுத்தி, நேரடியாக வந்து ஒவ்வெறு மாதமும் மின் கட்டண பட்டியலை வழங்க, மன்னார் மின்சாரசபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago