Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 ஜனவரி 17 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்ட செயலகத்தில் 44 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் வழங்கப்படாது கடந்த 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றுவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், தகவல் அலுவலருமான தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட தகவல் ஒன்றுக்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்கள், பிரிவுகள் என்பவற்றில் பல்வேறு தர நிலைகளில் கடந்த 5 வருட காலத்துக்கு மேலாக இடமாற்றம் எதுவும் வழங்கப்படாத நிலையில் 44 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இதேவேளை, வேறு சில உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் என உள்ளக இடமாற்றங்களைப் பெற்று குறித்த ஒரே திணைக்களத்தின் கீழ் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரியவருகிறது.
குறிப்பிட்ட மாவட்டத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் குறித்த கால எல்லையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago