2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’52,144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’

Niroshini   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (26) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சமூக தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமூக தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளன என்றார்.

அதன் அடிப்படையில் இதுவரையில் 52 ஆயிரத்து 144 பேருக்கு சமூக தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,  இதில் 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசியினை பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் 550 பேருக்கு 2ஆவது ஊசி வழங்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

'பல்கலைக்கழக மற்றும் கல்வியல் கல்லூரி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 666  பேருக்கு பைசல் தடுப்பூசி முதலாவது கட்டம் வழங்கப்பட்டுள்ளது.

'இதனடிப்படையில், மாவட்டத்தில் 68 சதவீதம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான 2ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 5ஆம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்படும்' என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .