Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7,000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என, சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில், 60 வயதுக்கு மேற்பட்டடோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை, இன்று (23) ஆரம்பித்து வைத்தப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர் எனவும் கூறினார்.
அவர்களில் ஏறத்தாள 11 ஆயிரம் பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்த அவர், மிகுதியான 7 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள் எனவும் கூறினார்.
தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை எனச் சாடிய அவர், அவர்களுக்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறினார்.
'இந்த நிலையில், இன்று (23) முதல் ஒரு வார காலத்துக்கு தடுப்பூசி ஏற்றாதவர்களின் வீடுகளுக்கு சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளை செலுத்தவுள்ளோம்.
மாவட்டத்தில் விடுபட்டுள்ள 7,000 பேருக்கும் தடுப்பூசியை செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
31 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
46 minute ago