Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வட மாகாணத்தில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் வடக்கு மாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 17 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 24 சிறுவர்களுமாக மொத்தமாக 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
“சிறுவர் துர்நடத்தைக்கு முயற்சித்ததாக யாழ். மாவட்டத்தில் 7 குற்றச்சாட்டுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 குற்றச்சாட்டுகளும், மன்னார் மாவட்டத்தில் 6 குற்றச்சாட்டுகளும், வவுனியா மாவட்டத்தில் 5 குற்றச்சாட்டுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் 32 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“அதேபோன்று, உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக, யாழ். மாவட்டத்தில் 11 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 14 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 8 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“உள ரீதியான தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக, யாழ். மாவட்டத்தில் ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 11 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 24 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“மேலும், நடப்பாண்டில், யாழ். மாவட்டத்தில் 3 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 2 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 10 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
“உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என, யாழ். மாவட்டத்தில் 23 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4 சிறுவர்களுமாக மொத்தம் 53 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“பாடசாலையில் இருந்து இடைவிலகிய சிறுவர்களாக, யாழ். மாவட்டத்தில் 23 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 17 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனரெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“மேலும், நடப்பாண்டில் வடக்கு மாகாண நீதிமன்றங்களில் சிறுவர்கள் தொடர்பில், யாழ். மாவட்டத்தில் 832 வழக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 வழக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 386 வழக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 478 வழக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 131 வழக்குகளுமாக மொத்தம் 1,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அத்தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
54 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago