2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

9 வயது சிறுமி விபத்தில் பலி

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா இரட்டைபெரியகுளம் பகுதியில்  இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்...

இன்றுகாலை  குறித்த சிறுமி தனது தாயுடன்  சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து விட்டு கல்குண்ணாமடுப் பகுதியிலுள்ள அவரது வீடுநோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.

இதன்போது  எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில்,முச்சக்கரவண்டியில் இருந்து சிறுமி தூக்கி வீசப்பட்ட உடனே உயிரிழந்துள்ளார்.

கல்குண்ணா மடுப்பகுதியை சேர்ந்த ஆகாசா ரசினி என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .