Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்
‘பூர்வீக மக்கள் அகதி வாழ்வில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவா? எதிர்க்கிறோம் வெறுக்கிறோம்’ என 339 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசெம்பர் 28 ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படையினரால் மாவட்ட செயலரிடம்; கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்னும் தமது காணிகளில் விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று(04) 339 ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை எதிர்த்து வாசகங்களை எழுதி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago