Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மன்னார் தேர்தல் அலுவலகத்தில் இன்று (18), கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூதினின் இணைப்புச் செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில், கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் செரீப், அமைச்சரின் செயலாளர் முஜாகிர், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.ம்.பஸ்மி ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதற்கமைய, மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்குப் பிரதேச சபை, ஆகிய 5 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, மன்னார் மாவட்டம் மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் போட்டியிடுவதற்கு, சுயேட்சை குழு ஒன்று, இன்று (18) காலை, மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
சுயேட்சைக்குழுவின் பொது வேட்பாளர் நிகால் நிர்மலராஜ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago