2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அக்காவின் காதலனால் தங்கை துஷ்பிரயோகம்

Editorial   / 2024 மே 23 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகையா தமிழ்செல்வன்

 கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால்  பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்
வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம்
தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவளது  அக்காவின்
காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்
பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை  கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X