2025 ஜூலை 02, புதன்கிழமை

அடைக்கலநாதனுக்கு யோசப்வாஸ் மக்கள் வரவேற்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனுக்கு, நேற்று  புதன்கிழமை (9) மாலை, தோட்டவெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

கிராம மக்கள், தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலய சந்தியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மோட்டார் சைக்கிள் பவனியுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலயத்திலும்  ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயத்திலும் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்துகொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .