Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மனித புதைக்குழி தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான உயர் மட்ட கலந்துரையாடலொன்று, இவ்வார இறுதிக்குள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் சதோச வளாகத்தில், தொடர்சியாக சந்தோகத்துக்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, தற்போது வரை குறித்த வளாகத்தில் இருந்து சுமார் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள், இன்று (28) இடம்பெற்றது.
இதன்போது, குறித்த மனித எச்சங்களுக்கு கீழும் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதால், அப்புறப்படுத்தும் பணிகளை முழுமையாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago